அடிடாஸ் நிறுவனம் பாடகர் ஈசியுடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட பிறகு அவருடன் ஒப்பந்தமிட்டுத் தயாரித்த 1.7 பில்லியன் வெள்ளி மதிப்பிலான காலணிகளை என்ன செய்வது என்று தெரியாமல் பல மாதங்களாகத் தவித்து வந்தது.
கடந்த அக்டோபர் மாதம் ஈசி சமூக ஊடகங்களில் சர்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டார். அதனால் அடிடாஸ் அவருடன் ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டது.
தற்போது அடிடாஸ் நிறுவனம் அந்த காலணிகளை என்ன செய்யலாம் என்று முடிவெடுத்துள்ளது.
ஈசியுடனான ஒப்பந்தத்தில் தயாரிக்கப்பட்ட காலணிகளில் ஒரு பகுதியை நிறுவனம் விற்க முடிவுசெய்துள்ளது. அதில் கிடைக்கும் பணத்தை ஈசியின் கருத்தால் பாதிக்கப்பட்ட அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்கவுள்ளதாக அது தெரிவித்துள்ளது.
காலணிகள் எப்போது விற்கப்படும் எத்தனை விற்கப்படும் என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.
ஈசியுடன் ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டததால் அடிடாஸ் நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட 880 மில்லியன் நட்டமானதாக கூறப்படுகிறது.


