பல்கலைக்கழகத்தில் படிக்கத் தடை; கண்ணீர் விடும் ஆப்கான் பெண்கள்

பல்கலைக்கழகத்தில் படிக்கத் தடை; கண்ணீர் விடும் ஆப்கான் பெண்கள்

1 mins read
9eeb94f6-6ed8-439d-8aa0-826ecc045027
காபூலில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்துக்கு வெளியே செய்வதறியாது நின்ற இளம் மாணவிகள். படம்: ஏஎஃப்பி -

ஆப்கான் பெண்கள் நடந்துவிடுமோ என்று அச்சப்பட்டது இன்று நடந்துவிட்டது.

ஆப்கானிஸ்தானின் பல்கலைக்கழகங்களுக்குள் செல்ல முயன்ற பெண்களை தலிபான்கள் தடுத்து நிறுத்தினர்.

தலிபான் அரசாங்கம் ஆப்கான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்கக் கூடாது என்று தடை விதித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை இரவு அந்த அறிவிப்பு வெளிவந்தது.

பல்கலைக்கழக வளாகங்களுக்கு வெளியே கூடிய பெண்கள் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து கதறி அழுதனர்.

சிறைப் பறவைகளாகி விட்டோம் என்று வேறு தாதிமைத் துறையில் படித்த 23 வயது மாணவி அமினி கூறினார்.

தங்கள் வருங்காலம் இருண்டுவிட்டதாக சிலர் தவிப்புடன் கூறினர்.

குளிர்காலத்தால் ஆப்கான் பல்கலைக்கழகங்களில் வகுப்புகள் ஏதும் நடக்கவில்லை. ஆனால் மாணவர்கள் தேர்வுகள் எழுதவும் நூலகங்களில் படிக்கவும் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் இன்றுமுதல் பெண்களுக்கு அனுமதி இல்லை.

கந்தஹமாரில் ஆண்கள் மட்டுமே இன்று தேர்வு எழுதினர்.

ஏற்கெனவே பெரும்பாலான உயர்நிலைப் பள்ளிகளில் மாணவிகள் படிக்க அனுமதிக்கப்படவில்லை.

பல்கலைக்கழகங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே திரை போடப்பட்டு வகுப்புகள் நடந்தன.

இனி ஆப்கானிஸ்தானில் பெண்கள் பள்ளிகளுக்குச் சென்று பயில்வதற்கான எல்லாக் கதவுகளும் மூடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.