ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்படக்கூடும்

1 mins read
2db2d431-bdb2-499c-af53-bcc9da023a1d
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிமுகப்படுத்தும் புதிய பயணத் தடை அடுத்த வாரம் நடப்பு வரக்கூடும் என்று கூறப்படுகிறது. - படம்: புளூம்பர்க்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிமுகப்படுத்தும் புதிய பயணத் தடையால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பயணத் தடையின்படி, அந்த இருநாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்படலாம்.

இது அடுத்த வாரத்திலிருந்து நடப்புக்கு வரக்கூடும் என்று கூறப்படுகிறது.

பயணத் தடைப் பட்டியலில் மற்ற நாடுகளும் இடம்பெறக்கூடும் என்று நம்பப்படுகிறது.

2017ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டு வரை டிரம்ப் அதிபராக முதன்முதலில் பதவி வகித்தபோது ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்குப் பயணத் தடை விதிக்கப்பட்டது.

அதன்படி அவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாது.

அதேபோன்று தற்போது நடப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

புதிய பயணத் தடை நடைமுறைப்படுத்தப்பட்டால் அமெரிக்காவில் அகதிகளாக வாழ அனுமதி வழங்கப்பட்டோர் ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தப்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அவர்கள் ஆப்கானிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டால் தலிபான் அரசால் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படும் அபாயம் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் அகதிகளாக வாழ அல்லது சிறப்பு குடிநுழைவு விசா கொண்டவர்களாக வசிக்க கிட்டத்தட்ட 200,000 ஆப்கானியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்