துபாய்: ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் உள்ள அபுதாபிக்கு சில மாதங்களுக்கு முன்னர் எஸ்வாட்டினி நாட்டு மன்னர் மூன்றாம் எம்சுவாட்டி (Mswati III) அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டார்.
மன்னர் எம்சுவாட்டி அபுதாபி விமான நிலையத்தில் தரையிறங்கியபோது அவரின் 15 மனைவிகள், 30 பிள்ளைகள், 100 ஊழியர்கள் உடனிருந்தனர். அவருக்கு மொத்தம் 30 மனைவிகள் உள்ளனர்.
அதுதொடர்பான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இவ்வாண்டு ஜூலை மாதம் 10ஆம் தேதி இச்சம்பவம் நடந்தது.
தனியார் சொகுசு விமானத்தில் தரையிறங்கியபோது மன்னர் எம்சுவாட்டி பழங்குடியின ஆடையில் இருந்தார்.
அவரது வருகையின்போது அபுதாபி விமான நிலையத்தின் மூன்று முனையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
மன்னர் எம்சுவாட்டியின் சொகுசு வாழ்க்கை தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
மன்னர் எம்சுவாட்டியின் தந்தைக்கு 70க்கும் மேற்பட்ட மனைவிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
1986ஆம் ஆண்டு முதல் எஸ்வாட்டினி நாட்டை எம்சுவாட்டி ஆள்கிறார். அவரின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலர்.
தொடர்புடைய செய்திகள்
மன்னர் எம்சுவாட்டிக்கு தற்போது 56 வயது. அவர் ஆண்டுக்கு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறார். இதற்குப் பல கண்டனங்களும் எழுந்துள்ளன.
எஸ்வாட்டினி மன்னர் சொகுசாக வாழ்ந்தாலும் அந்நாட்டில் உள்ள 60 விழுக்காட்டினர் வறுமையில் வாடுகின்றனர்.