தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
2040ஆம் ஆண்டுக்குள் 40 விழுக்காடு இயற்கை எரிசக்தியைக் கொண்டிருக்க இலக்கு

சூரிய சக்தி திட்டங்களை பெரிய அளவில் நிறுவ மலேசியா தீவிர முயற்சி

1 mins read
24f20de0-c5bf-40f0-92c7-cecd9b979c1c
மலேசியாவில் சூரியசக்தியைச் சேமித்து வைக்கும் கட்டமைப்புகளை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. - படம்: ஐபி விஓஜிடி

கோலாலம்பூர்: மலேசியா, பெரிய அளவிலான சூரியசக்தித் திட்டங்களை விரிவுபடுத்த தீவிரமாக முயன்று வருவதாய் அந்நாட்டு எரிசக்தி உருமாற்ற, நீர் உருமாற்ற துணையமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகமது நசிர் கூறியுள்ளார்.

2040ஆம் ஆண்டுக்குள் தேசிய எரிசக்தியில் 40 விழுக்காடு, இயற்கை எரிசக்தியாக இருக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி அரசாங்கம் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

“2040ஆம் ஆண்டில் 40 விழுக்காட்டு இலக்கை எட்ட உரிய அனுமதிகளுடன் தற்போதுள்ள கட்டமைப்பால் சமாளிக்கக்கூடிய பெரிய அளவிலான சூரியசக்தி திட்டங்களை அமைக்கிறோம்,” என்றார் திரு அக்மல்.

இருப்பினும், பகல் நேரத்தில் மட்டும் உற்பத்தியாகும் சூரியசக்தியைச் சேமித்துவைக்க பேட்டரி எரிசக்தி சேமிப்புக் கட்டமைப்புகளை நிறுவுவதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டதாக அவர் சொன்னார்.

தேசிய எரிசக்தி உருமாற்றத் திட்டத்தின்கீழ் ஈராண்டுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட புதிய எரிசக்தி வளங்களை அரசாங்கம் ஆராய்வதையும் திரு அக்மல் சுட்டினார்.

உள்நாட்டில் உற்பத்தி செய்வதைத் தவிர்த்து, ஆசியான் மின்சாரக் கட்டமைப்புத் திட்டத்தின்கீழ் வட்டார அளவிலான ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்த மலேசியா முயல்கிறது என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்