இம்மாதம் 19ஆம் தேதி ஹோர்முஸ் நீரிணை முழுமையாகத் திறக்கப்படும்

இம்மாதம் 19ஆம் தேதி ஹோர்முஸ் நீரிணை முழுமையாகத் திறக்கப்படும்

2 mins read
6694c33b-72de-4bc5-846a-fcd86a81b909
ஓமன் அருகில் ஜூன் 8ஆம் தேதி ஹோர்முஸ் நீரிணையில் நங்கூரமிட்டிருந்த கப்பல்கள். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

வாஷிங்டன்: ஈரானுடன் செய்துகொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தத்தின்படி, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்குக் கட்டணங்கள் தேவையில்லை என்று அமெரிக்கா செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) தெரிவித்தது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கையெழுத்திட்ட அந்த ஒப்பந்தத்தில் ஈரான் சில குறிப்பிட்ட நிபந்தனைகளைக் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டியுள்ளது. அவற்றை ஈரான் செய்தால்தான் பொருளியல் பலன்களைப் பெறமுடியும் என்று அமெரிக்கா நினைவூட்டியது.

போரினால் சேதமடைந்துள்ள ஈரானை மறுநிர்மாணம் செய்யத் தேவைப்படும் S$384.9 பில்லியன் (US$300 பில்லியன்) மதிப்புள்ள நிதி உதவியும் அதில் அடங்கும். ஆயினும் அந்த நிதி ஈரான் எவ்வாறு அதன் நிபந்தனைகளை நிறைவேற்றுவதைப் பொருத்தே வழங்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அரசாங்கத்தின் மூத்த நிர்வாகி செய்தியாளர்களிடம் கூறினார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஈரானிய நாடாளுமன்ற நாயகர் முகம்மது பகர் கலிபா ஆகியோர் மின்னிலக்க முறையில் அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) கையெழுத்திட்டதாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இதற்கிடையில், ஈரானும் அமெரிக்காவும் அந்நாடுகளின் கப்பல்கள் நீரிணையைக் கடந்து செல்லத் தொடங்கிவிட்டதென அறிவித்துள்ளன. அதிபர் டிரம்ப், நீரிணை இம்மாதம் 19ஆம் தேதிக்குள் முழுமையாகத் திறக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான்மீது நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, உலகின் முக்கிய எரிசக்தி விநியோகத்தொடரின் வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணை முடங்கிப்போனது.

தற்போது மீண்டும் திறக்கப்படும் நிலையில், மாதக் கணக்கில் தொடரும் மத்திய கிழக்குப் பூசலுக்குத் தீர்வு காண்பதற்கு ஓர் முக்கியக் காரணமாகவும் அது அமையலாம்.

எண்ணெய்யுடன் பல கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை விட்டு நகரத் தொடங்கிவிட்டன என்று அதிபர் டிரம்ப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விவரங்கள் சிலவற்றை அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டனர்.

வெள்ளிக்கிழமை நீரிணை முழுவதும் திறந்துவிடப்படுவதாகவும் அதே நாளில் அதிகாரபூர்வமாக ஜெனீவாவில் அமெரிக்கா-ஈரான் இருநாடுகளுக்கு இடையிலான அமைதி உடன்பாடு கையெழுத்தாகும் என்றும் கூறினர்.

பிரான்சில் திங்கட்கிழமை (ஜூன் 15) முதல் வியாழக்கிழமை (ஜூன் 17) வரை நடைபெறும் ஜி7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துகொள்கிறார். அதில் ஈரான் குறித்து சிறப்புப் பேச்சுவார்த்தை ஒன்றும் இடம்பெறும். எகிப்து, கத்தார், ஐக்கிய அரபுச் சிற்றரசு ஆகிய நாடுகள் அக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளன.

குறிப்புச் சொற்கள்
அமைதிஒப்பந்தம்ஈரான் போர்அமெரிக்காஹோர்முஸ் நீரிணைகப்பல்கட்டணம்