கர்ப்பிணிகளுக்கு வேளாண் பொருள் மானியம்

கர்ப்பிணிகளுக்கு வேளாண் பொருள் மானியம்

1 mins read
f0888768-46df-4d13-98c2-8dd3a14e06ed
ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்தத் திட்டம், சோலில் வசிக்கும் ஏறத்தாழ 29,200 பெண்களுக்குப் பலனளிக்கும். தென்கொரியக் குடிமக்கள் மட்டுமன்றி, சோலில் வசிக்கும் வெளிநாட்டுப் பெண்களும் இந்தச் சலுகையைப் பெறத் தகுதியுடையவர்கள். - படம்: பிக்சாபே

சோல்: தென் கொரியத் தலைநகர் சோலில் வசிக்கும் கர்ப்பிணிகளுக்கு உயிரினச் சூழலுக்கு உகந்த வேளாண் தொழில்நுட்பம் மூலம் விளைவிக்கப்பட்ட பொருள்களை வாங்குவதற்காக ஆண்டுக்கு 240,000 வோன் (S$205) மானியம் வழங்கப்படும் என சோல் மாநகராட்சி அறிவித்துள்ளது.

ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்தத் திட்டம், சோலில் வசிக்கும் ஏறத்தாழ 29,200 பெண்களுக்குப் பலனளிக்கும். தென்கொரியக் குடிமக்கள் மட்டுமன்றி, சோலில் வசிக்கும் வெளிநாட்டுப் பெண்களும் இந்தச் சலுகையைப் பெறத் தகுதியுடையவர்கள்.

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதிக்குப் பிறகு, மகப்பேறு அடைந்தவர்களும் இதைப் பெற விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இணையம் வழியாகத் தங்கள் ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம். உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் அல்லது வெளிநாட்டினர் தங்கள் வசிப்பிடத்துக்கு அருகிலுள்ள சமூகச் சேவை நிலையத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

ஏற்கெனவே அரசாங்கத்தின் வேளாண், உணவு தொடர்பான பிற மானியங்களைப் பெறுபவர்கள் இதற்கு விண்ணப்பிக்க இயலாது. தேர்வு செய்யப்படும் பெண்கள், இதற்கென அங்கீகரிக்கப்பட்ட இணைய வர்த்தகர்களிடமிருந்து பொருள்களை வாங்கும்போது 80 விழுக்காடு வரை மானியம் பெறலாம். மாதம் நான்கு முறை வரை பொருள்கள் வாங்க அனுமதி உண்டு. ஒவ்வொரு முறையும் வாங்கும் பொருள்களில் குறைந்தது 50 விழுக்காடு வேளாண் பொருள்கள் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். இத்திட்டத்திற்கான நிதிச் சுமையை மாநில மற்றும் மாநகராட்சி அரசாங்கங்கள் இணைந்து பகிர்ந்துகொள்கின்றன.

குறிப்புச் சொற்கள்