‘ஏஐ’யின் ‘சேட்பாட்’கள் குழந்தைகளுக்கு ஆபத்தானவை: ஆஸ்திரேலிய அமைப்பு

1 mins read
0507961a-f649-49c9-9946-5d5e74c479f2
குழந்தைகள் ஆபத்தான தகவல்களை எளிதாகப் பெறுகின்றனர், அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் இணையப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்தது - படம்: சமூக ஊடகம்

சிட்னி: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உதவியுடன் இயங்கக்கூடிய சில சேட்பாட்கள் (chatbots) தற்கொலைக்குத் தூண்டுவது, பாலியல் தொடர்பான தகவல்களைக் காட்டுவது உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. இது குழந்தைகளுக்குப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலியாவின் இணையப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஆஸ்திரேலியாவில் இதுதொடர்பாகப் புதிய விதிமுறைகளைக் கொண்டுவரவும் அமைப்பு தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது.

குழந்தைகள் ஆபத்தான தகவல்களை எளிதாகப் பெறுகின்றனர், அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அந்த அமைப்பு தெரிவித்தது.

ஆஸ்திரேலியா, இணையக் கட்டமைப்பையும் அதன் சூழலையும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதில் அதிகக் கவனம் செலுத்தி வருகிறது.

அண்மையில் இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் பயன்படுத்தக்கூடாது என்று சட்டத்தை இயற்றியது. அது வரும் டிசம்பர் மாதம் முதல் நடப்புக்கு வருகிறது.

குறிப்புச் சொற்கள்