கணையப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் ‘ஏஐ’

கணையப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் ‘ஏஐ’

2 mins read
ed8f70da-447c-40ae-8fa3-cb7064e7a9fe
‘ரெட்மோட்’ (Redmod) என்ற அழைக்கப்படும் அந்தப் புதிய தொழில்நுட்பம், ‘சிடி ஸ்கேன்’ படங்களை நன்கு ஆராயும். - படம்: பிக்சாபே

நியூயார்க்: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் கணையப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய முடியும் என்று ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

பொதுவாக ‘ஸ்கேன்’ உள்ளிட்ட மருத்துவச் சோதனைகள் மூலம்தான் கணையப் புற்றுநோயை அடையாளம் காண முடியும். ஆனால், இப்போது இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் உதவியால் முன்கூட்டியே நோயைக் கண்டுபிடித்து அதற்குச் சிகிச்சை அளிக்கமுடியும் என்று கூறப்படுகிறது.

‘மாயோ கிளினிக்’ மற்றும் அதனைச் சார்ந்த ஆய்வாளர்களின் உதவியால் அந்தப் புதிய ‘ஏஐ’ தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

‘ரெட்மோட்’ (Redmod) என்ற அழைக்கப்படும் அந்தப் புதிய தொழில்நுட்பம், ‘சிடி ஸ்கேன்’ படங்களை நன்கு ஆராயும். மனிதர்களின் கண்ணுக்குத் தெரியாத பலவற்றையும் அது ஆராயும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் பலர் காப்பாற்றப்படலாம்.

ஆய்வில் 1,400 பேரின் ‘ஸ்கேன்’கள் பரிசோதனை செய்யப்பட்டன. அவர்களில் 73 விழுக்காட்டினருக்குப் புற்றுநோய் இருப்பது ‘ஏஐ’ மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

அதேநேரம், 1,400 பேரின் ‘ஸ்கேன்’களில் 39 விழுக்காட்டினருக்கு மட்டுமே புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

‘சிடி ஸ்கேன்’ உள்ளிட்ட பல சோதனைகளை எடுத்த பின்னர்தான் ஒருவருக்குக் கணையப் புற்றுநோய் இருப்பது உறுதிப்படுத்தப்படும். அதற்குச் சராசரியாகக் கிட்டத்தட்ட 475 நாள்கள் தேவைப்படும்.

கணையப் புற்றுநோயை அதன் ஆரம்பக்காலத்திலேயே அடையாளம் காண்பது கடினம். அது எந்த ஓர் அறிகுறியையும் காட்டாது. நோய் முற்றிய பிறகுதான், அதை அடையாளம் காண முடியும். அதனால்தான், அந்நோயால் இறப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்