தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொய் சொல்லப் பழகிவரும் ‘ஏஜ’

2 mins read
a76e0cb4-e03b-4601-b315-07918e6bca27
திறமைமிக்க சில செயற்கை நுண்ணறிவு திட்டங்கள் தற்போது புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளன. - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொழில்நுட்பத் துறையில் அதிகக் கவனத்தை ஈர்த்தது செயற்கை நுண்ணறிவு (ஏஐ).

பல வேலைகளை எளிதாகச் செய்து முடிக்க அது உதவும் என்றும் இது உலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திறமைமிக்க சில செயற்கை நுண்ணறிவு திட்டங்கள் தற்போது புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளன.

திறமைமிக்க சில செயற்கை நுண்ணறிவுத் தளங்கள் பொய் சொல்வது, தந்திரமாகச் செயல்படுவது, மிரட்டல் விடுவிப்பது போன்றவற்றைக் கற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளன.

அண்மையில் ஒரு பொறியாளர் Claude 4 என்னும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தினார். அது திடீரென அவரின் தனிப்பட்ட விவரங்களை வெளியிடப் போவதாக மிரட்டியுள்ளது.

அதேபோல் ChatGPT நிறுவனத்தின் OpenAI’ o1 செயற்கை நுண்ணறிவுத் திட்டம் தானாகக் கணினிக் கட்டமைப்புகளில் பதிவிறக்கம் செய்துகொண்டுள்ளது.

பதிவிறக்கம் செய்யப்படுவதைக் கண்ட பொறியாளர்கள் அது தொடர்பாக கேள்வி கேட்டபோது அதை OpenAI’ o1 மறுத்துள்ளது.

அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால் செயற்கை நுண்ணறிவின் உண்மை நிலை கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருவதாகக் கவனிப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவை உருவாக்கியவர்களே இது எதிர்காலத்தில் எப்படி உருமாறும், வேலை செய்யும் என்று புரியாமல் யோசித்து வருகின்றனர்.

இதுபோன்ற பிரச்சினைகள் எழுந்தாலும் செயற்கை நுண்ணறிவை மேலும் மேம்படுத்துவதில் நிறுவனங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர்.

OpenAI’ o1 போன்ற புதிய செயற்கை நுண்ணறிவுத் திட்டங்கள்தான் சில பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.

அவற்றைச் சரியாகக் கட்டமைக்க வேண்டும் என்று தொழில்நுட்ப வல்லுநர்களும் ஆராய்ச்சியாளர்களும் கருதுகின்றனர்.

அவற்றைச் சரியாகக் கட்டமைக்கத் தவறினால் எதிர்காலத்தில் அவை ரகசியமாக வேறோர் இலக்கை நோக்கிச் செயல்படத் தொடங்கக்கூடும் என்றும் கவனிப்பாளர்கள் எச்சரித்தனர்.

தற்போது பொறியாளர்கள் வேண்டுமென்றே புதிய செயற்கை நுண்ணறிவுத் தளங்களின் கருப்புப் பக்கத்தை ஆராய்ந்து வருகின்றனர்.

அதனால்தான் இதுபோன்ற மிரட்டல், பொய்சொல்வது போன்ற நிகழ்வுகள் இடம்பெறுகின்றன என்று கூறப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு மனிதர்களுக்கு எதிராகச் செயல்படத் தொடங்கினால் அது எந்த அளவுக்குச் செல்லும் என்பதைப் பார்க்க இந்த ஆய்வு பயன்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்