பாகிஸ்தான் விலங்கியல் பூங்காவில் வாழ்ந்து வந்த நூர்ஜகான் என்ற பெண் யானை சனிக்கிழமை (ஏப்ரல் 22) காலமானது.
ஆப்ரிக்க வகை யானையான நூர்ஜகான், உடல்நலம் குன்றி பல நாள்களாக தவித்து வந்ததாக பூங்கா கூறியது.
கால்களில் ஏற்பட்ட கட்டியால் 17 வயது நூர்ஜகானுக்கு அண்மையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அதன்பின் யானையால் கிட்டத்தட்ட 9 நாள்கள் நடக்கமுடியவில்லை.
யானைக்கு தேவையான சிகிச்சையை ஆரம்பக்கட்டத்திலேயே செய்திருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர்.
பாகிஸ்தான் விலங்கியல் பூங்காக்களில் விலங்குகளுக்குப் போதுமான அளவு பராமரிப்பு சேவைகள் வழங்கப்படுவதில்லை என்ற குறைகூறலும் எழுந்துள்ளது.
நூர்ஜகான் உள்ள பூங்கா கராச்சி நகரில் உள்ளது, அதை மூடவேண்டும் என்று
விலங்குநல ஆர்வலர்கள் போராடத் தொடங்கியுள்ளனர்.


