தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2025ல் விமானப் பயணச்சீட்டுக் கட்டண உயர்வு தொடரும்

1 mins read
 ‘ஏமெக்ஸ் ஜிபிடி’ பயண நிறுவனம் முன்னுரைப்பு
eaad3499-7d91-48d8-9cc6-fdcd6f4cfbeb
சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்படும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நியூயார்க்: 2025ல் உலகம் முழுவதும் விமானப் பயணச்சீட்டுக் கட்டணங்கள் மேலும் உயரவிருப்பதாக ‘ஏமெக்ஸ் ஜிபிடி’ (Amex GBT) பயண நிறுவனம் முன்னுரைத்துள்ளது.

பயணச்சீட்டுக் கட்டணங்கள், அதிகரித்துவரும் செலவினங்களை வெளிப்படுத்துகின்றன.

பெரும்பாலான பயணப் பாதைகளில் கட்டணங்கள் உயரும். என்றாலும், வட்டாரத்தைப் பொறுத்து கட்டண உயர்வின் அளவு மாறுபடும்.

வடஅமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கட்டணங்கள் 2 விழுக்காடாக மிதமான அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் கட்டண அதிகரிப்பு கிட்டத்தட்ட 14 விழுக்காடாக இருக்கும்.

விமானப் பணியாளர்களின் சம்பள உயர்வும் ஊழியர் பற்றாக்குறையும் பயணக் கட்டண உயர்வுக்கு முக்கியக் காரணங்களாக அறிக்கை சுட்டியது.

மேலும், விமான நிறுவனங்கள் புதிய கட்டணங்களைச் சேர்த்து வருகின்றன. மலிவுக் கட்டண விமான நிறுவனங்கள், விமான நிலையங்களில் ஓய்விடங்களுக்கும் கூடுதல் வசதியுடைய இருக்கைகளுக்கும் செலவிட்டுள்ளன.

ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையே பயணப் பாதைகளில் ‘இகானமி’ பிரிவு, வர்த்தகப் பிரிவுக் கட்டணங்கள் முறையே 6.6 விழுக்காடும் 8.2 விழுக்காடும் அதிகரிக்கக்கூடும்.

குறிப்புச் சொற்கள்