பேராக் விமான விபத்தில் இருவர் காயம்

1 mins read
182cf294-0a8e-4958-8fb3-f0bb8f659349
விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து வெளியேறிய பயணி, உள்ளூர்வாசியிடம் உதவி கேட்டதாகக் கூறப்படுகிறது. - படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தஞ்சோங் மாலிம்: இலகுரக விமானம் ஒன்று பேராக்கின் சுங்காய் பகுதியில் விழுந்து நொறுங்கியது.

அதில் ஆடவர் ஒருவரும் பெண் ஒருவரும் இருந்ததாக ஆரம்பக் கட்டத் தகவல்கள் கூறுகின்றன.

பனை எண்ணெய்த் தோட்டத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி காலை 9.55 மணிக்கு விமானம் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.

விபத்துக்குள்ளானது லாயாங் லாயாங் விமானப் பயிற்சிக்கழகத்தைச் சேர்ந்ததொரு பயிற்சி விமானம் என்று மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் உறுதிப்படுத்தியது.

விமானம் ஈப்போவிலுள்ள சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையத்திலிருந்து காலை 7.54 மணிக்குப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

விபத்து காரணமாக விமானத்தில் இருந்த இருவருக்கும் காயம் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

இருவரும் சிலிம் ரிவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக திரு யுஸ்‌ரி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்