பாம்புகளுடன் வந்த விமானப் பயணி!

பாம்புகளுடன் வந்த விமானப் பயணி!

1 mins read
3dc915aa-eaad-4381-856c-74e12735c137
பைக்குள் இருந்த பாம்புகள். - படம்: டிஎஸ்ஏ_கல்ஃப் / எக்ஸ்

மயாமி: விமானப் பயணி ஒருவர், பாம்புகளை ஒரு பையில் போட்டுக் கட்டி, அதனைத் தன் காற்சட்டையில் வைத்து எடுத்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மயாமி அனைத்துலக விமான நிலையப் பாதுகாவலர்கள் இதனைக் கண்டுபிடித்தனர்.

கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்ததாக போக்குவரத்துப் பாதுகாப்பு நிர்வாக (டிஎஸ்ஏ) அமைப்பு, ‘எக்ஸ்’ ஊடகம் வழியாகத் தெரிவித்தது.

அப்பயணியிடமிருந்து மீட்கப்பட்ட பாம்புகள் பின்னர் ஃபுளோரிடா மீன், காட்டுயிர்க் காப்பகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்தப் பயணி, குளிர்கண்ணாடிக்கான பையில் அப்பாம்புகளைப் போட்டு எடுத்து வந்ததாக அறியப்படுகிறது.

அவர் பாம்புகளைப் பையில் போட்டு எடுத்து வந்ததற்கான காரணம் தெரியவில்லை.

குறிப்புச் சொற்கள்