ஈரான் தலைமைத்துவத்தில் 1989 முதல் இருந்துவரும் ஆயத்துல்லாஹ் அலி , தாம் கொல்லப்பட்டால் தமக்கு அடுத்து வரக்கூடிய மூன்று சமயத் தலைவர்களின் பெயரை அறிவித்துள்ளார்.
இஸ்ரேலிய அல்லது அமெரிக்க தரப்புகள் தம்மைக் கொல்லக்கூடும் என்று கவனத்துடன் அந்த 86 வயது தலைவர் தற்போது ராணுவச் சுரங்கத் தளத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். நம்பிக்கைக்குரிய உதவியாளர் ஒருவர் வழியாக அவர் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்தது.
அயத்துல்லாஹ் அலி தம் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க மேலும் சிரமமாக்க தொலைத்தொடர்புகளைத் துண்டித்துள்ளதாகத் தகவல் அறிந்த ஈரானிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஈரானில் அமெரிக்க நடத்திய அந்தத் தாக்குதல், இஸ்ரேல் ஈரான் போருக்குள் அமெரிக்காவை நேரடியாக ஈடுபடுத்தியுள்ளது.
ஈரானில் 1979ல் நடந்த இஸ்லாமிய புரட்சிக்கு அடுத்து முதல் முறையாக அமெரிக்கா தனது ஆகாயப் படையை ஈடுபடுத்தியுள்ளது.