தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய ‘ஏஐ’ மென்பொருளை வெளியிட்ட அலிபாபா; ‘டீப்சீக்’கை விஞ்சும் எனத் தகவல்

1 mins read
65eb0038-5938-4695-8cd2-2586eaafdb64
வெளிநாட்டு நிறுவனங்களை மட்டுமல்லாது உள்நாட்டு நிறுவனங்களையும் ‘டீப்சீக்’ விழிக்கச் செய்திருக்கிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: சீனத் தொழில்நுட்ப நிறுவனமான அலிபாபா தனது குவென் 2.5 (Qwen 2.5) செயற்கை நுண்ணறிவு மென்பொருளின் புதிய பதிப்பை ஜனவரி 29ஆம் தேதி வெளியிட்டது.

இந்தப் புதிய பதிப்பு அமெரிக்காவை ஆட்டம் காணவைத்த சீன செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மென்பொருளான டீப்சீக்கை (DeepSeek) விஞ்சும் என அலிபாபா தெரிவித்தது.

பெரும்பாலான சீனர்கள் தங்கள் பணிகளை விடுத்து அவர்களது குடும்பத்தினருடன் செலவிடும் சீனப் புத்தாண்டின் முதல் நாளன்று இந்த மேம்படுத்தப்பட்ட குவென் 2.5 மென்பொருளை அலிபாபா வெளியிட்டிருப்பது மிகவும் விந்தையாகவுள்ளது.

இதற்கு கடந்த மூன்று வாரங்களாக அமெரிக்கா உட்பட வெளிநாட்டு செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களை ஆட்டம் காணவைத்தது ‘டீப்சீக்’ மென்பொருளின் வரவே எனக் கூறப்பட்டது.

வெளிநாட்டு நிறுவனங்களை மட்டுமல்லாது உள்நாட்டு நிறுவனங்களையும் ‘டீப்சீக்’ விழிக்கச் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்