வெள்ளிக்கிழமைகளில் ஜோகூர் ஊழியர்களுக்கு இரண்டு மணி நேரம் ஓய்வு

1 mins read
dc9d90d9-1952-40d8-a7fb-7f6ad24f0d74
முஸ்லிம் மக்களின் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு கூடுதல் ஓய்வு நேரம் உதவிபுரியும் என்று மாநில முதல்வர் ஒன் ஹஃபிஸ் கூறியுள்ளார். - கோப்புப் படம்: பெக்ஸல்ஸ்

இஸ்கந்தர் புத்ரி: 2025ஆம் ஆண்டு தொடங்கியதும் ஜோகூர் மாநிலத்தில் பணிபுரியும் எல்லா ஊழியர்களுக்கும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரண்டு மணி நேர ஓய்வு வழங்கப்படும் என்று முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸி அறிவித்து உள்ளார்.

அவர்களுக்கு அந்த ஓய்வை வழங்குமாறு பொது மற்றும் தனியார் துறையினர் கேட்டுக்கொள்ளப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

ஜோகூரில் தற்போதைய வாரயிறுதி விடுப்பு நாள்கள் வெள்ளி, சனி என்று உள்ளன. 2025 ஜனவரி 1 முதல் அவை சனி, ஞாயிறு என மாற்றம் காணும். அதற்கேற்ற வகையில், வெள்ளிக்கிழமை கூடுதல் ஓய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

“முஸ்லிம் மக்களின் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு கூடுதல் ஓய்வு நேரம் உதவிபுரியும்.

“இந்த மாற்றத்திற்கு ஏற்ப, ஜோகூரில் உள்ள எல்லா அரசாங்கத் துறைகளும் அமைப்புகளும் மத்திய அரசின் விடுமுறைப் பட்டியலை சரிசெய்துகொள்ளும்.

“தனியார் துறையில் வேலை செய்யும் முஸ்லிம்களும் தொழுகையில் ஈடுபடுவதை உறுதிசெய்யும் பொருட்டு, அவர்களுக்கு ஒன்றரை மணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரம் வரை ஓய்வு வழங்குமாறு தனியார் துறையினரை அரசாங்கம் கேட்டுக்கொள்ளும்,” என்றார் முதல்வர் ஒன் ஹஃபிஸ்.

கோத்தா இஸ்கந்தரில் வியாழக்கிழமை (நவம்பர் 21) ஜோகூர் மாநில வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்து பேசியபோது அவர் இந்த விவரங்களை வெளியிட்டார்.

குறிப்புச் சொற்கள்