பாதிக்கப்பட்டோரில் கிட்டத்தட்ட பாதிப் பேர் மூத்த குடிமக்கள்

பாதிக்கப்பட்டோரில் கிட்டத்தட்ட பாதிப் பேர் மூத்த குடிமக்கள்

1 mins read
eb0895e7-819a-47b8-8046-5edea709a4a6
கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றான புக்கிட் மேரா வியூ மார்கெட், உணவங்காடி நிலையம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

புக்கிட் மேரா, ரெட்ஹில் வட்டாரங்களில் உருவாகியிருக்கும் நான்கு கொவிட்-19 தொற்றுக் குழுமங்களில் பாதிக்கப் பட்டோரில் கிட்டத்தட்ட பாதிப் பேர் மூத்த குடிமக்கள் எனக் கூறப்படுகிறது.

அக்குழுமங்களில் பாதிக்கப்பட்ட 98 பேரில் 46.9 விழுக்காட்டினர் 60 வயதும் அதற்கு மேற்பட்ட வயதினரும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பகுப்பாய்வு தெரிவிக்கிறது.

அக்குழுமங்களில் பாதிக்கப்பட்டோரின் இடைநிலை வயது 51 என்றும் பாதிக்கும் மேற்பட்டோர், அதாவது 55.1 விழுக்காட்டினர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அக்குழுமங்களில் பாதிக்கப்பட்ட மூத்த குடிமக்களில் ஐவரில் இருவர் இன்னும் தடுப்பூசி போடவில்லை எனச் சொல்லப் படுகிறது.

மொத்தத்தில், அந்நான்கு குழுமங்களிலும் பாதிக்கப்பட்டோரில் ஏறத்தாழ 56 விழுக்காட்டினர் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.