உக்ரேனுக்கு உதவ 2,000 கிலோமீட்டர் பயணம் செய்த அவசர உதவி வாகனங்கள்

உக்ரேனுக்கு உதவ 2,000 கிலோமீட்டர் பயணம் செய்த அவசர உதவி வாகனங்கள்

1 mins read
266713a0-3050-4788-9a85-17a0285659a7
படம்: ராய்ட்டர்ஸ் -

மருத்துவப் பொருள்கள், உணவு, உடை என நன்கொடையாக கிடைத்த பல பொருள்களை இங்கிலாந்தில் இருந்து உக்ரேனுக்கு இரண்டு அவசர உதவி வாகனங்கள் பாதுகாப்பாக எடுத்துச் சென்றுள்ளன.

போலாந்து - உக்ரைன் எல்லையில் அந்த பொருள்கள் ஒப்படைக்கப்பட்டன.

இரண்டு அவசர உதவி வாகனங்களும் 1,931 கிலோ மீட்டர் பயணம் செய்தன.

ஏப்ரல் 28ஆம் தேதி பொருள்களுடன் கிளம்பிய வாகனங்கள் மே 1ஆம் தேதி உக்ரேன் எல்லையைத் தொட்டது.

ஒரு வாகனத்தில் இருந்த பொருள்களை உக்ரேன் ராணுவ அதிகாரிகள் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இரண்டாவது வாகனம் உக்ரேனில் உள்ள தொண்டூழிய அமைப்பிடம் கொடுக்கப்பட்டது.

போர் சூழலில் உதவிப் பொருள்களைப் பெற்றுக்கொண்ட உக்ரேன் மக்கள், தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டதாக வாகன ஓட்டுநர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்