கலிஃபோர்னியா: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் மருத்துவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கியது.
திங்கட்கிழமை (அக்டோபர் 6) இரவு மருத்துவ ஹெலிகாப்டர் கலிஃபோர்னியாவின் விரைவுச் சாலை 50ல் மோதியது.
அச்சம்பவத்தில் மூவருக்குக் காயம் ஏற்பட்டது. அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
விபத்து காரணமாக அந்த விரைவுச் சாலையில் சில சாலைத் தடங்கள் மூடப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் அவசர உதவி ஊழியர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
விபத்து இரவு 7 மணிவாக்கில் நிகழ்ந்ததாகவும் ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்தில் சிக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
உசி டேவிஸ் மருத்துவ நிலையத்திலிருந்து கிளம்பிய ஹெலிகாப்டர் சேக்ரமென்டோ நகரில் உள்ள கிழக்கு நோக்கிச் செல்லும் விரைவுச்சாலை 50ல் விபத்துக்குள்ளானது.
விபத்தின்போது ஹெலிகாப்டரில் ஒரு விமானி, தாதி, மருத்துவ உதவியாளர் இருந்தனர். ஹெலிகாப்டரில் நோயாளிகள் யாரும் இல்லை. அதேபோல் ஹெலிகாப்டர் சாலையில் எந்த வாகனத்துடனும் மோதவில்லை.
சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
ஹெலிகாப்டர் சாலையில் உள்ள கார்களுக்கு அருகில் பறந்து சென்று சாலைத் தடுப்பில் மோதி விழுவதை அந்தக் காணொளிகளில் பார்க்க முடிந்தது.