வாஷிங்டன்: சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதக் குழுவுக்கு எதிராக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பேரளவிலான தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க ராணுவம் கூறியது.
சனிக்கிழமை (ஜனவரி 10) நடத்தப்பட்ட அந்தத் தாக்குதல், டிசம்பரில் நடந்த துப்பாக்கிச்சூடு ஒன்றுக்குப் பதிலடி என அமெரிக்கத் தரப்பு கூறியுள்ளது.
டிசம்பர் 13ல் பால்மிராவில் தனியொருவர் துப்பாக்கித் தாக்குதலை நடத்தியதில் அமெரிக்கா ராணுவ வீரர்கள் இருவரும் உரைபெயர்ப்பாளர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.
சிரியாவில் நடந்த அந்தத் தாக்குதலுக்கு எதிராக இந்த வான்வழித் தாக்குதல் குறிவைத்து நடத்தப்படுவதாக அமெரிக்க ராணுவம், தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டது.
டிசம்பர் 2024ல் பஷர் அல் அசாத் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து அமெரிக்கா இத்தகைய தாக்குதல் ஒன்றை நடத்தியது.

