அமெரிக்க ஆதரவுப் பேச்சுவார்த்தை: வெனிசுவேலா எதிர்க்கட்சி புறக்கணிப்பு

அமெரிக்க ஆதரவுப் பேச்சுவார்த்தை: வெனிசுவேலா எதிர்க்கட்சி புறக்கணிப்பு

1 mins read
f19fe7ba-b9fa-4252-bda0-8d55adb892db
வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மசாடோ. - படம்: ராய்ட்டர்ஸ்

கரகாஸ்: வெனிசுவேலாவில் டெல்சி ரொட்ரிகசின் இடைக்கால அரசாங்கத்துடன் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஆதரவுப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என்று நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மசாடோ அறிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எட்முண்டோ கொன்சாலஸ் உருட்டியாவுடன் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், இந்தப் பேச்சுவார்த்தையின் வரைவு, உருவாக்கம் மற்றும் செயல்பாடுகளில் எதிர்க்கட்சி பங்குபெறாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில், இடைக்கால அரசாங்கமும் முன்னாள் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் இணைந்து இதற்கான திட்டத்தை அறிவித்திருந்தன. வெனிசுவேலாவில் அரசியல் இணக்கத்தை ஏற்படுத்த இது மிக முக்கியமான நடவடிக்கை என அமெரிக்கா இதனை வரவேற்றிருந்தது.

2024ஆம் ஆண்டு நடைபெற்ற சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலில் எட்முண்டோ கொன்சாலஸ் அடைந்த வெற்றியை மசாடோ மீண்டும் ஆதரித்தார். எனினும், உண்மையான முன்னேற்றத்தைத் தரும் எந்தவொரு முயற்சிக்கும் தாம் தடையாக இருக்கப்போவதில்லை என்றும் விரைவில் வெனிசுவேலா திரும்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்