தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வீட்டில் 7 புலிகள் வளர்த்த ஆடவர் கைது

1 mins read
3a4f0250-a2df-4676-a9e7-0d1aacc25df9
முதியவரின் வீட்டில் இருந்த ஏழு புலிகளும் பாதுகாப்பாக விலங்குநலக் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  - படம்: பிக்சல்ஸ்

நெவேடா: அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் அருகே உள்ள பகுதியில் ஆடவர் ஒருவர் தமது மன ஆறுதலுக்காக 7 புலிகளை வளர்த்துள்ளார்.

அவரின் சட்டவிரோத நடவடிக்கையை அறிந்த அதிகாரிகள் புலிகளை மீட்டு ஆடவரைக் கைது செய்துள்ளனர்.

கார்ல் மிட்சல் என்னும் அந்த 71 வயது முதியவர் ஏப்ரல் 2ஆம் தேதி அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.

மிட்சலின் வீட்டில் புலிகள் வளர்க்கப்படுவதை அறிந்த அதிகாரிகள் அவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது புலிகள் அடைக்கப்பட்ட கூண்டுகளின் சாவியை அதிகாரிகள் கேட்டபோது அதை மிட்சல் தர மறுத்துவிட்டார்.

அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். புலிகள் தொடர்பான ஆவணங்களும் மிட்சலிடம் இல்லை. ஆடவர் அன்றே பிணையில் வெளிவந்தார்.

மிட்சல் தனது மன ஆறுதலுக்காகப் புலிகளை வளர்த்ததாக விசாரணையில் தெரிவித்தார். ஆடவர் புலிகளை எப்படி வாங்கினார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மிட்சல் வீட்டில் இருந்த ஏழு புலிகளும் பாதுகாப்பாக விலங்குநலக் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்