ஈரான் மீதான அமெரிக்க ராணுவ முற்றுகை, பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்: நிபுணர்கள்

ஈரான் மீதான அமெரிக்க ராணுவ முற்றுகை, பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்: நிபுணர்கள்

2 mins read
நீரிணையைச் சுற்றிவளைக்கும் அமெரிக்காவின் ராணுவ முற்றுகை, போருக்கான அடையாளம்: நிபுணர்கள் கருத்து
14409983-8fa1-4320-9f70-dc83fc8ea5b0
அமெரிக்கக் கடற்படையின் விமானந்தாங்கிக் கப்பல்களில் ஒன்றான ‘யுஎஸ்எஸ் ரானல்ட் ரீகன்’. - படம்: எஸ்பிஎச் ஊடகம்

ஈரான் துறைமுகங்கள்மீது அமெரிக்கா நேரடியாகத் தொடங்கியுள்ள ராணுவ முற்றுகை, பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று ராணுவ நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்.

ஈரானுக்கு வரிகள் செலுத்தி ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்களையும் அமெரிக்க ராணுவம் தடுக்கும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அனைத்துலகக் கடற்பகுதிகளில் பயணம் செய்யும் கப்பல்களுக்கும் இந்த நிலை பொருந்தும் என அவர் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டார்.

அந்த நடவடிக்கையால் ஈரான் அமைதியாக இருக்காது. பதில் செயல்பாடுகளில் அதுவும் ஈடுபடும் என்பதால், ஏற்கெனவே நிலைதடுமாறியுள்ள மத்திய கிழக்குச் சண்டைநிறுத்தம் எந்த நேரத்திலும் உடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானுக்குள் நுழையும் அல்லது அந்நாட்டை விட்டு வெளியேறும் கப்பல்கள் மட்டும் தடைகளுக்கு உட்படுத்தப்படும் என்று அமெரிக்க ராணுவ மத்தியத் தளபத்தியம் தெளிவுபடுத்தியது.

அத்தடைகள் அரேபிய, ஓமானிய வளைகுடாவில் இயங்கும் அனைத்து ஈரானிய துறைமுகங்களுக்கும் விதிக்கப்படும் என்றும் தளபத்தியம் விளக்கம் அளித்தது.

அமெரிக்காவின் இலக்கு, உலகின் 20 விழுக்காட்டு எண்ணெய்யை விநியோகம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடுவதைத் தடுப்பது என்று அதிபர் டிரம்ப் கூறினார்.

அதோடு, ஈரானிடம் அனுமதி பெற்று, அப்பகுதியைக் கடக்கும் நாடுகளின் போக்கையும் அமெரிக்கா தடுக்க விழைகிறது.

திரு டிரம்பின் திட்டம் நிறைவேறினால், ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் கை ஓங்கியே இருக்கும். உலக வர்த்தகத்துக்கு நீரிணை மீண்டும் தயாராகி எரிவாயு, எண்ணெய் விலைகள் குறையும் வாய்ப்பு ஏற்படும்.

ஆயினும், நீரிணையைச் சுற்றி அமெரிக்காவின் ராணுவ முற்றுகையும் கப்பல் போக்குவரத்துக்கு வைக்கும் தடைகளும் போருக்கான அடையாளமாகும்; அதற்குப் பல போர்க் கப்பல்களை அமெரிக்கா தயாராக வைத்திருக்க வேண்டும் என்று ராணுவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்