வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானங்களில் ஒன்று சேவையிலிருந்து விடைபெற்றுள்ளது.
30 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்க அதிபர்கள் இரண்டு ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானங்களைத் தங்களது அதிகாரத்துவப் பயணங்களுக்குப் பயன்படுத்தினார்கள்.
“ஒரு நல்ல நம்பிக்கையான ஊழியர்,” என்று ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானத்தைப் பாராட்டி அதிபர் டோனல்ட் டிரம்பின் செய்தித் தொடர்பு இயக்குநர் ஸ்டீவன் செங் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
வெள்ளை-நீல வண்ண கம்பீரமான ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானத்தின் கடைசிப் பயணம் அண்மையில் பிரான்சில் நடந்து முடிந்த ஜி7 உச்சநிலை மாநாடு ஆகும்.
இரண்டாவது ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானம் இனி எவ்வளவு காலம் சேவையில் இருக்கும் என்பது குறித்து விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் பயன்படுத்த கத்தார் புதிதாக ஒரு விமானத்தைப் பரிசளித்துள்ளது. விமானத்தின் விலை பல மில்லியன் டாலர் இருக்கும் என்று கூறப்படுகிறது.
கத்தார் வழங்கிய விமானத்தை மே மாதம் அமெரிக்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அது ஜூலை மாதம் முதல் சேவைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

