அமெரிக்க பல்கலைக்கழக துப்பாக்கிச்சூடு: சந்தேக நபர் படம் வெளியீடு

1 mins read
f4162d3f-5277-4a99-bc1b-26ffa9e2dcc4
ரோட்ஸ் தீவில் உள்ள புரோவிடன்ஸ் நகரின் அதிகாரிகள் புதன்கிழமை (டிசம்பர் 17) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் சந்தேக நபரின் படங்களை வெளியிட்டனர். - படம்: நியூ யார்க் டைம்ஸ்

புரோவிடன்ஸ்: அமெரிக்க காவல்துறையினர் அண்மையில் நடந்த பிரௌன் பல்கலைக்கழக துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சந்தேக நபர் ஒருவரின் படங்களை புதன்கிழமை (டிசம்பர் 17) செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டுள்ளனர்.

ரோட்ஸ் தீவில் உள்ள புரோவிடன்ஸ் நகர பொதுப் பாதுகாப்பு நிலையத்தில் வெளியிடப்பட்ட படங்களில் உள்ள அந்த நபர் மற்றொரு துப்பாக்கிச் சூடு சம்பவத்திலும் ஈடுபட்டிருக்கலாம் எனவும் விசாரணை பற்றிய விவரங்கள் அறிந்து அடையாளம் தெரிவிக்க விரும்பாத இரண்டு அதிகாரிகள் வியாழக்கிழமை (டிசம்பர் 18) குறிப்பிட்டுள்ளனர்.

அந்த இரு சம்பவங்களிலும் ஒரே துப்பாக்கிக்காரன் கொலைகளைச் செய்திருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரணையில் நம்பப்படுகிறது. சந்தேக நபரின் முழு விவரங்கள் வெளியிடப்படவில்லை.

டிசம்பர் 13ஆம் தேதி பிரௌன் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிக்காரன் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இருவர் மரணமடைந்து பலர் காயமுற்றனர்.

மசெசுசெட்ஸ் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் உள்ள பொறியியல் பேராசிரியர் நுனோ எஃப்.ஜி என்பவர் டிசம்பர் 15ஆம் தேதி இரவு சுடப்பட்டு மறுநாள் மரணமடைந்தார்.

இரு சம்பவங்களிலும் பயன்படுத்திய வாடகை வாகனத்தின் வகை ஒரே மாதிரியாக இருப்பதாக அதிகாரிகள் கூறினர். தப்பிச் சென்ற துப்பாக்கிக்காரனைத் தேட நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டு டிசம்பர் 14ஆம் தேதி 24வயது சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.

மரபணு சோதனைகளுக்குப் பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்