வாஷிங்டன்: அமெரிக்காவின் நெப்ராஸ்காவில் வாழும் எமிலி மேயன் என்ற மாது டிக்டாக் தளத்தை வருடிப் பார்த்துக்கெண்டிருந்தார்.
அப்பொழுது அவர் கண்ணில் பட்ட ஒரு காணொளியை அவர் பார்த்தார். அதில் அதிபர் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளால் அத்தியாவசிய குழந்தைப் பராமரிப்புப் பொருள்களின் விலை ஏறக்கூடும் என்று தெரிவித்ததைக் கண்டார்.
கர்ப்பிணியாக இருந்த திருவாட்டி மோயின் தான் உடனடியாக வாகனங்களில் வைக்கப்படும் குழந்தை இருக்கையை தற்போதைக்கு வேண்டாம் என்ற நிலையில் முதலில் இருந்தார்.
பின்னர் அதனை வாங்கலாம் என்ற எண்ணத்தில் இருந்த மோயின், கிரோக்கோ (Graco) ரக குழந்தைகள் கார் இருக்கை சீனாவில் தயாரிக்கப்பட்டது என்பதை அறிந்தார். தற்போதைய நிலையில் 200 அமெரிக்க டாலர் (S$264) விலையில் உள்ள அந்த கார் இருக்கையின் விலை ஏறும் என்ற கவலையில் அமேசான் தளத்தில் உடனடியாக அதை வாங்கினார்.
“அதை இப்பொழுதே வாங்க வேண்டும் என்ற நினைவலை உடனே தோன்றியது,” என்று கூறுகிறார் 29 வயதாகும் திருவாட்டி மோயின்.
சீனாவுடனான வர்த்தகப் போர் உக்கிரம் அடையும் நிலையில் அமெரிக்கர்கள் பலர் வெளிநாட்டுப் பொருள்களின் விலை விரைவில் அதிகரிக்கும் என்ற அச்சத்தில் அவற்றை வாங்கிக் குவிக்கத் தொடங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
சிலர் விலையுயர்ந்த ஐபோன், குளிர்பதனப் பெட்டிகள், போன்றவற்றையும் சீன இணையத்தளங்களின் மூலமாக வாங்க விரைகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.