வாஷிங்டன்: அமெரிக்க அரசாங்க ஊழியர்களுக்கு நெருக்குதல் அளிக்கும் வகையில் மீண்டும் மின்னஞ்சல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மெச்சத்தக்க வேலைகளைச் செய்து முடித்தீர்கள் எனக் கேட்டு அதைப் பட்டியலிடும்படி அவர்களுக்கு வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) மின்னஞ்சல் அனுப்பிவைக்கப்பட்டது.
சில நாள்களுக்கு முன்பு இதே கேள்வியை திரு இலோன் மஸ்க் அமெரிக்க அரசாங்க ஊழியர்களிடம் எழுப்பியிருந்தார்.
அப்போது ஊழியர்களுக்குப் பயம், குழப்பம் ஏற்பட்டது.
“கடந்த வாரம் என்னென்ன செய்தீர்கள்?’” எனும் தலைப்பில் மின்னஞ்சல் அனுப்பிவைக்கப்பட்டது.
செய்து முடித்த ஏறத்தாழ ஐந்து பணிகளைப் பட்டியலிடும்படி ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் பொறுப்பைத் திரு மஸ்க்கிடம் பெருஞ்செல்வந்தவரும் அமெரிக்க அதிபருமான டோனல்ட் டிரம்ப் ஒப்படைத்துள்ளார்.
அந்த மின்னஞ்சலுக்குப் பதிலளிக்கத் தவறினால் பதவி விலகுவதாக எடுத்துக்கொள்ளப்படும் என்று திரு மஸ்க் சமூக ஊடகம் வாயிலாகத் தெரிவித்தார்.