எண்ணெய் விலை ஏற்றத்துக்கு இடையே வலுவடைகிறது டாலரின் மதிப்பு

எண்ணெய் விலை ஏற்றத்துக்கு இடையே வலுவடைகிறது டாலரின் மதிப்பு

1 mins read
47672b3d-c12f-4516-ba6a-8c30112afab3
அரசாங்கப் பங்குப் பத்திரங்களின் ஈவுத்தொகை உயர்ந்து வருவதாலும் வட்டி விகிதத்தை மத்திய வங்கி அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பாலும் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் டாலரின் மதிப்பு மேலும் வலுவடைந்துள்ளது.  - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

தோக்கியோ: மத்திய கிழக்குப் போரால் எண்ணெய் விலை உயர்ந்துவரும் நிலையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உறுதியாக உள்ளது.

எண்ணெய் விலை ஏற்றத்தால் உலக அளவில் பணவீக்கம் குறித்த கவலையும் மீண்டும் எழுந்துள்ளது.

அரசாங்கப் பங்குப் பத்திரங்களின் ஈவுத்தொகை உயர்ந்து வருவதாலும் வட்டி விகிதத்தை மத்திய வங்கி அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பாலும் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் டாலரின் மதிப்பு மேலும் வலுவடைந்துள்ளது. அண்மைப் பொருளியல் தரவுகள் கணிப்புகளைவிடக் குறைவாக இருந்தபோதிலும் டாலரின் மதிப்பு உறுதியாக இருக்கிறது.

அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை

அமெரிக்கா செவ்வாய்க்கிழமை ஈரான் மீது பல தாக்குதல்களை நடத்தியது. ஈரான் அவற்றுக்குப் பதிலடி கொடுத்தது. இந்நிலையில் புதன்கிழமை காலை வர்த்தகத்தில், எண்ணெய் விலை கிட்டத்தட்ட ஒரு விழுக்காடு கூடியது.

பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 0.92 விழுக்காடு அதிகரித்து பீப்பாய்க்கு $95.52ஆக இருந்தது. அமெரிக்க வெஸ்ட் டெக்சஸ் இன்டர்மீடியெட் கச்சா எண்ணெய் விலை 0.89 விழுக்காடு உயர்ந்து பீப்பாய்க்கு $91.02ஆக இருந்தது.

“இன்று மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலையைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியது அவசியம்,” என்று சோனி நிதிக் குழுமத்தின் மூத்த ஆய்வாளர் குமிகோ இஷிகாவா தெரிவித்தார்.

யென், யூரோ உள்ளிட்ட மற்ற முக்கிய நாணயங்களின் மதிப்புடன் டாலரை ஒப்பிடும் டாலர் குறியீடு 99.67ஆக இருந்தது.

குறிப்புச் சொற்கள்
டாலர்மதிப்புஅமெரிக்க டாலர்எண்ணெய்விலைமத்திய கிழக்குபணவீக்கம்ஈரான்அமெரிக்காபோர்ஈரான் போர்