தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலிவான விலைக்கு விற்ற பயணச்சீட்டுகளை ரத்து செய்த விமான நிறுவனம்

1 mins read
94600b72-20d9-48ff-911d-811c69f8a3eb
படம்: ஏஎஃப்பி -

ஆல் நிப்பான் ஏர்வேஸ் (ANA) விமான நிறுவனம் சில நாள்களுக்கு முன்னர் தமது இணையத்தளத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக குறைந்த விலைக்கு 'பிஸ்னஸ் கிளாஸ்' பயணச்சீட்டுகளை விற்றது.

தற்போது அந்தப் பயணச்சீட்டுகளை ரத்து செய்துள்ளதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு முழுமையாக பணம் திருப்பித் தரப்படும் என்றும் அது தெரிவித்தது.

அண்மையில் நிறுவனத்தின் வியட்னாமுக்கான இணையப்பக்கத்தில் நாணயச் செலாவணி தொடர்பில் காணப்பட்ட சிறு தவற்றை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பலர் சில நூறு வெள்ளிகளுக்கே 'பிஸ்னஸ் கிளாஸ்' பயணச்சீட்டுகளை வாங்கினர்.

ஹெர்மன் யிப் என்ற 32 வயது ஆடவர் மட்டும் 333,000 வெள்ளி மதிப்புள்ள விமான பயணச் சீட்டுகளை 22,000 வெள்ளிக்கு வாங்கினார்.

தவறுக்கும் சிரமத்திற்கும் வாடிக்கையாளர்களிடம் ஆல் நிப்பான் ஏர்வேஸ் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

மலிவான விலைக்கு கிடைத்த பயணச்சீட்டுகள் இப்போது ரத்து செய்யப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்