அன்வார்: வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க 6 உடனடி நடவடிக்கைகள்

அன்வார்: வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க 6 உடனடி நடவடிக்கைகள்

2 mins read
தமிழ்ப் பள்ளி உட்பட அனைத்துப் பள்ளிகளுக்குமான பராமரிப்பு நிதி 1.5 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரிப்பு; ரோன்95 பெட்ரோல் அளவு அதிகரிப்பு
a32a0354-4c18-459b-aebf-7d7d82187c59
புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) ஆற்றிய தேசிய தின உரையில், வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க உடனடி உதவித் திட்டங்களை அறிவித்தார். - படம்: மலே மெயில்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: வாழ்க்கைச் செலவின அழுத்தத்தைக் குறைக்கவும் வணிகங்களுக்கு உதவவும் ஆறு உடனடி நடவடிக்கைகளை மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.

வாழ்க்கைச் செலவின அழுத்தங்களும் வணிகங்களின் வளர்ச்சியும் வரும் அக்டோபர் மாதம் வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படும்வரை காத்திருக்க முடியாது என்பதால் இந்நடவடிக்கைகள் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) ஆற்றிய தேசிய தின உரையில் அவர் கூறினார்.

மாதாந்தர மானிய விலைக்னுகு ரோன்95 பெட்ரோல் அளவு 200 லிட்டரிலிருந்து 300 லிட்டராக உயர்த்தப்படுகிறது.

தேசியப் பள்ளி, தமிழ்ப் பள்ளி, சீனப் பள்ளி, சமயப் பள்ளி, சிறப்புப் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளுக்குமான 2025ம் ஆண்டு பராமரிப்பு நிதி 50 விழுக்காடு உயர்த்தப்பட்டு 1.5 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கப்படுகிறது. பள்ளிகளின் பழுதுபார்ப்பு விண்ணப்பங்களை ஆய்வு செய்யக் கல்வி அமைச்சு அடுத்த மாதம் முதல் மாவட்டங்களுக்குச் செல்லும்.

மக்களுக்கான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திட்டம் 18 முதல் 30 வயது வரையிலான இளையர்களுக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது. குறிப்பிட்ட பயிற்சிகளை முடிக்கும் 100,000 இளையர்களுக்கு முன்னணி ஏஐ செயலிகளை மூன்று மாதங்களுக்கு இலவசமாகப் பயன்படுத்தும் வசதி வழங்கப்படும்.

சுகாதாரத் துறையில் மின்னிலக்க மருத்துவப் பதிவேடு, இணைய இணைப்பை வலுப்படுத்த மலேசியத் தொடர்பு, பல் ஊடக ஆணையம் ஒரு பில்லியன் ரிங்கிட் ஒதுக்கும்.

சிறு வணிகர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மின்-பற்றுச்சீட்டு விலக்குக்கான ஆண்டு விற்பனை வரம்பு 3 மில்லியனாக உயர்த்தப்படுகிறது. கடன் வசதி 6 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டு, 200 மில்லியன் ரிங்கிட் மானியமும் வழங்கப்படும்.

பொருளியல் சாதனை வளர்ச்சி

அண்மைய பொருளியல் முன்னேற்றங்களைக் குறிப்பிட்ட அன்வார், 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளும் வணிகமும் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளன. அத்துடன், 2025ல் ஆசியாவில் சிறந்த செயலாற்றல் கொண்ட நாணயமாக ரிங்கிட் உருவெடுத்துள்ளது.

இச்சாதனைகள் ஒரே இரவில் சாத்தியப்படவில்லை. நல்ஆளுமை, நிர்வாகச் சீர்திருத்தங்கள் மூலமே சாத்தியமானது என்ற திரு அன்வார், நாட்டின் அமைதியையும் ஒற்றுமையையும் பாதுகாக்குமாறு மலேசியர்களைக் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்