கோலாலம்பூர்: மலேசியப் பொதுத் தேர்தலை முன்னரே நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
பொருளியலை மீளச் செய்வது, மக்கள் நலனை மேம்படுத்துவது, ஊழலை எதிர்ப்பது, அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்ப்பது ஆகியவற்றுக்கான முயற்சிகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துவருவதாக அவர் கூறினார்.
மேலும், மத்திய அரசாங்கம் நிலையாக இருப்பதாகவும் தொடர்ந்து ஆட்சி நடத்தி நாட்டை சீரான முறையில் கவனித்துக்கொள்ள அதற்குப் போதுமான நாடாளுமன்ற ஆதரவு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


