கோலாலம்பூர்: மலேசியப் பிரதமரும் நிதியமைச்சருமான அன்வார் இப்ராகிம் 421 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வரவுசெலவுத் திட்டத்தை அக்டோபர் 18ஆம் தேதியன்று தாக்கல் செய்தார்.
அதிக வருமானம் ஈட்டுவோருக்கு எரிபொருள், கல்வி மானியங்கள் வழங்கப்படாது என்று அவர் தெரிவித்தார்.
இலக்கு சார்ந்த திட்டங்கள் மூலம் எரிபொருள், கல்வி மானியங்கள் வழங்குவது கட்டுப்படுத்தப்படும்.
அதிக வருமானம் ஈட்டுவோருக்கான RON 95 ரக பெட்ரோல் மானியம் 2025ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் ரத்து செய்யப்படும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் மேலும் தெரிவித்தார்.
அவர்கள் இவ்வளவு நாள்களாகப் பெற்றுவந்த கல்வி மானியங்கள் படிப்படியாகக் குறைக்கப்படும் என்றார் அவர்.
எஞ்சியுள்ள 85 விழுக்காடு மலேசியர்களுக்கான 12 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள மானியம் தொடரும் என்று திரு அன்வார் கூறினார்.