கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் குடலிறக்க (hernia) அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகு மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தாம் புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கும் படத்தை திரு அன்வார் பதிவேற்றம் செய்திருந்தார். அப்பதிவில் தாம் வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


