புக்கிட் மெர்த்தாஜாம்: மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியிலும் மலேசியாவின் எரிபொருள் இருப்பு ஜூலை மாதம் வரை போதிய அளவில் உள்ளது என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் மலேசியர்களுக்கு உறுதியளித்துள்ளார்.
ஈரான் நாட்டுடன் மலேசியா கொண்டுள்ள நல்லுறவு மற்றும் அரசதந்திரக் கூட்டு முயற்சி காரணமாக, நாட்டின் பெட்ரோல் மற்றும் டீசல் தேவையை அரசாங்கத்தால் தங்குதடையின்றி உறுதிசெய்ய முடிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மலேசியக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை எவ்வித இடையூறும் இல்லாது கடந்துவர அந்த நல்லுறவு பெரிதும் உதவியுள்ளதைப் பிரதமர் அன்வார் சுட்டினார்.
“ஈரானுடனான மலேசியாவின் அரசதந்திர உறவுகள் மனிதநேயம் மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிரான ஒருமைப்பாட்டை மட்டும் அடிப்படையாகக் கொண்டவை அல்ல. அவை மலேசியாவின் எரிசக்திப் பாதுகாப்புக்கும் பேரளவில் பலனளிக்கின்றன,” என்றார் அவர்.

