பெட்டாலிங் ஜெயா: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் குடலிறக்கப் பிரச்சினைக்காக (ஹெர்னியா) அறுவை சிகிச்சையை மேற்கொண்டதாக அவரின் மருத்துவர் குழு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10) தெரிவித்தது.
“தற்போது அவர் இயன் மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டுவருகிறார். அவர் சீராக குணமடைவதை உறுதிப்படுத்த மருத்துவ வல்லுநர்க் குழுவின் கண்காணிப்பில் இருக்கிறார்,” என்று மருத்துவர் குழுவின் அறிக்கை கூறியது.
திங்கட்கிழமை 79வது பிறந்தநாளைக் கொண்டாடிய அன்வார் இப்ராகிமுக்கு, அரசியல் தலைவர்கள் பலரும் சமூக ஊடகங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
அவர் இரு நாள்களுக்குத் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் மலேசியாவின் பிரதமர் அலுவலம் திங்கட்கிழமை வெளியிட்ட தெரிவித்தது.
“நிபுணத்துவ மருத்துவர்க் குழு முடிவெடுத்த பரிசோதனைகளையும் சிகிச்சை முறைகளையும் அன்வார் மேற்கொண்டுவருகிறார்,” என்று அறிக்கை கூறியது.
பரிசோதனைகள், சிகிச்சை முறைகள் குறித்த தகவல்களை அறிக்கை வெளியிடவில்லை. மருத்துவப் பரிசோதனைகளும் சிசிக்கை முறைகளும் சீராக நடக்கவேண்டும் என்றும் அவர் தொடர்ந்து ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்றும் வேண்டிக்கொள்ளுமாறு அந்த அறிக்கையில் மலேசியர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.


