பெட்டாலிங் ஜெயா: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் மகளான நுருல் இஸா அன்வார், மக்கள் நீதிக் கட்சியின் (பிகேஆர்) துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டுள்ளார்.
மேல்கல்வி பயில்வதற்காக திருவாட்டி நுருல் இஸா அப்பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள கோரிக்கை விடுத்திருந்தார். அவரின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.


