பெட்டாலிங் ஜெயா: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
சிலாங்கூரில் உள்ள மருத்துவமனையில் அவர் உடல்நலப் பரிசோதனை செய்து கொண்டார்.
இதையடுத்து சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் மருத்துவச் சோதனை முடிவுகள் பிரதமர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதைக் காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அவர், தமது கடமைகளைத் தொடர தகுதியானவர் என்பதைச் சோதனை முடிவுகள் காட்டுகின்றன.
"இந்தப் பரிசோதனை பிரதமரின் உடல் தகுதி மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வைப் பராமரிப்பதற்கான உறுதிப்பாட்டையும் காட்டுகிறது," என்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) அறிக்கை தெரிவித்தது.
திரு அன்வார், நாட்டை வழிநடத்தவும், மக்களுக்கான தனது பொறுப்புகளை நிறைவேற்றவும் தகுதியானவர் என்பதை மருத்துவ மதிப்பீடுகள் உறுதி செய்வதாகவும் அறிக்கை குறிப்பிட்டது.

