வர்த்தகத்தில் எந்தவொரு பாதுகாப்புவாதக் கொள்கையும் மலேசியாவை பாதிக்கும்: அன்வார்

1 mins read
டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராகத் திரும்புவது தொடர்பில்
b311698e-8e4c-40d4-bfa5-939b0f1f44ae
சிஎன்என் நிறுனவத்தின் ரிச்சர்ட் குவெஸ்ட் உடனான நேர்காணலில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் பாதுகாப்புவாதக் கொள்கைகள் குறித்துப் பேசினார். - படம்: எக்ஸ் தளத்தின் காணொளியிலிருந்து எடுக்கப்பட்டது

கோலாலம்பூர்: பாதுகாப்புவாதம் எந்த வகையில் அமைந்தாலும் வர்த்தகம், முதலீடு ஆகியவை தொடர்பில் அது நாடுகளை பாதிக்கும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

சிஎன்என் நிறுவத்தின் ரிச்சர்ட் குவெஸ்ட் உடனான நேர்காணலில் பேசிய அவர், மலேசியாவின் நுண்சில்லுகள் பேரளவில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் அது 26% என மதிப்பிடப்படுவதாகவும் கூறினார்.

“நாங்கள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர்ந்தாலும் சேராவிட்டாலும், கொள்கைகள் எங்களை பாதிக்கும். நுண்சில்லுகள், பகுதிமின்கடத்திகள் ஆகியவை பேரளவில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. எனவே, எந்தவிதமான பாதுகாப்புவாத நடவடிக்கைகளும் எங்களை நிச்சயமாக பாதிக்கும்,” என்று திரு அன்வார் குறிப்பிட்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் கடந்த வாரம் டோனல்ட் டிரம்ப் வெற்றி பெற்றதால் எதிர்காலத்தில் பாதுகாப்புவாதக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டு அவை மலேசியாவை பாதிக்குமா என்ற கேள்விக்கு மலேசிய நிதி அமைச்சராகவும் உள்ள அன்வார் இவ்வாறு பதிலளித்திருந்தார்.

இறக்குமதிக்கு வரி விதிப்பதன் மூலம் ஒரு நாட்டின் உள்நாட்டு தொழில்களை வெளிநாட்டுப் போட்டியிலிருந்து பாதுகாக்கும் கொள்கையே பாதுகாப்புவாதம். இதனைப் பெரிதும் ஆதரித்துக் குரல்கொடுத்து வருபவர் டோனல்ட் டிரம்ப்.

“நாங்கள் அமெரிக்கா, ஐரோப்பாவுடனான ஒத்துழைப்புவழி அதிகம் பலனடைந்துள்ளோம். இப்போது சீனாவும் வளர்ந்து வருகிறது. அத்துடன் வர்த்தக, முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்த பிரிக்ஸ் மேலும் அதிக வழிகளை அமைக்கவுள்ளது,” என்று விவரித்தார் திரு அன்வார்.

குறிப்புச் சொற்கள்