வீட்டு வேலையில் ஆண்களின் பங்களிப்பைக் கண்காணிக்க செயலி

வீட்டு வேலையில் ஆண்களின் பங்களிப்பைக் கண்காணிக்க செயலி

1 mins read
2018c952-095a-4383-bb2a-291c84f169b7
படம்: பிக்சாபே -

மட்ரிட்: வீட்டு வேலைகளை ஆண்களும் பெண்களும் சரிவர பகிர்ந்துகொள்கின்றனரா என்பதைக் கண்காணிக்க ஸ்பெயினில் புதிய செயலி ஒன்று விரைவில் அறிமுகம் காண்கிறது.

மாதர்களுக்கு எதிரான பாகுபாட்டைக் களையும் ஐக்கிய நாட்டுக் குழுவின் சந்திப்பின்போது, ஸ்பெயினின் சமத்துவ அமைச்சை சேர்ந்த உயரதிகாரி ஏஞ்சலா ரோட்ரிகெஸ் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

"ஆண்களைவிட பெண்களே அதிக நேரம் வீட்டு வேலைகளைச் செய்கின்றனர் என்பதை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன," என்று ரோட்ரிகெஸ் குறிப்பிட்டார்.

குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும் வீட்டு வேலைகளில் தாம் செலவிடும் நேரத்தைப் பதிவிட புதிய செயலி வகைசெய்யும்.

வீட்டு வேலைகளில் பெரும்பாலானவற்றை தாங்களே சுமப்பதாக 45.9% பெண்கள் குறிப்பிட்டதாக, ஸ்பெயினின் தேசிய புள்ளிவிவரக் கழகம் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியிட்ட ஆய்வு முடிவில் தெரியவந்தது.