$1.3 பில்லியன் வழக்கை எதிர்நோக்கும் ‘ஆப்பிள்’ நிறுவனம்

$1.3 பில்லியன் வழக்கை எதிர்நோக்கும் ‘ஆப்பிள்’ நிறுவனம்

1 mins read
afbcabdc-69f4-4f4a-bb79-81bff6b379b0
‘ஆப் ஸ்டோர்’ உள்ளிட்ட ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் சேவைகள் தொழிலிருந்து கிடைக்கும் வருவாய் இப்போது காலாண்டுக்குச் சுமார் $20 பில்லியனாக உள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

பிரசல்ஸ்: பிரிட்டனில் உள்ள 1,500க்கும் மேற்பட்ட செயலி மேம்பாட்டாளர்கள், ‘ஆப்பிள்’ நிறுவனத்திற்கு எதிராக அதன் ‘ஆப் ஸ்டோர்’ கட்டணங்களின் தொடர்பில் 785 மில்லியன் பவுண்ட்ஸ் (S$1.34 பில்லியன்) வழக்கைத் தொடுத்துள்ளனர்.

‘ஆப் ஸ்டோர்’ உள்ளிட்ட ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் சேவைகள் தொழிலிலிருந்து கிடைத்த வருவாய் கடந்த சில ஆண்டுகளில் மிக விரைவில் வளர்ச்சி கண்டு, இப்போது காலாண்டுக்குச் சுமார் $20 பில்லியனாக உள்ளது.

இந்நிலையில் அந்த நிறுவனம் 15 விழுக்காடு முதல் 30 விழுக்காடுவரை விதிக்கும் சேவைக் கட்டணத்திற்குச் செயலி மேம்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், தனது ‘ஆப் ஸ்டோர்’இல் உள்ள செயலி மேம்பாட்டாளர்களில் 85 விழுக்காட்டினர் எவ்விதச் சேவைக் கட்டணத்தையும் செலுத்துவதில்லை என்று ‘ஆப்பிள்’ முன்னதாகக் கூறியது.

அதன் ‘ஆப் ஸ்டோர்’ மூலம் உலகம் முழுவதும் 175 நாடுகளில் உள்ள சந்தைகளையும் வாடிக்கையாளர்களையும் சென்றடைவதற்கு தான் உதவுவதாகவும் ‘ஆப்பிள்’ சொன்னது.

குறிப்புச் சொற்கள்