ஆப்பிள் ஐபேட், மேக்புக் விலை உயர்வு: ஏஐ சில்லுகளின் தட்டுப்பாடு காரணம்

ஆப்பிள் ஐபேட், மேக்புக் விலை உயர்வு: ஏஐ சில்லுகளின் தட்டுப்பாடு காரணம்

படம்: ராய்ட்டர்ஸ்

26 Jun 2026 - 11:04 am

2 mins read

சான் பிரான்சிஸ்கோ: செயற்கை நுண்ணறிவுத் துறையின் தரவு மையக் கட்டமைப்புப் பணிகளால் தரவுச் சேமிப்புச் சில்லுகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 

இதன் காரணமாக, வாடிக்கையாளர்களை இனியும் விலை உயர்விலிருந்து பாதுகாக்க முடியாது எனக் கூறி, ‘ஐபேட்’, ‘மேக்புக்’ சாதனங்களின் விலைகளை ஆப்பிள் நிறுவனம் ஜூன் 25ஆம் தேதி உயர்த்தியது.

இந்த நடவடிக்கை ஆப்பிள் நிறுவனத்திற்கு அதிக வருவாயைத் தரும் முக்கியச் சாதனமான ‘ஐஃபோனை’ப் பாதிக்காது. 

இருப்பினும், மலிவு விலை விண்டோஸ் (Windows), குரோம்புக் (Chromebook) மடிக்கணினிகளின் சந்தைப் பங்கைக் கைப்பற்றும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட, ஆப்பிளின் குறைந்த விலை மடிக்கணினியான ‘நியோ’வின் (Neo) தொடக்க விலை 599 அமெரிக்க டாலரிலிருந்து (777 வெள்ளி) 699 டாலராக உயர்ந்துள்ளது. 

இது அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களிலேயே இவ்வாறு விலை உயர்த்தப்பட்டுள்ளது.

விலை உயர்வுக்கான காரணங்கள் 

தொழில்துறையினரையே வியக்க வைக்கும் அளவிலான விநியோகச் சங்கிலித் தொடர்புகளைக் கொண்ட, உலகின் மதிப்புமிக்க பயனீட்டாளர் மின்னணுச் சாதன நிறுவனமே இந்தத் ட்ஹ்ச் சில்லுகளின் விலை உயர்விலிருந்து தப்ப முடியவில்லை என்பதை இந்த விலை மாற்றம் காட்டுகிறது. 

இந்த விலை உயர்வு, திறன்பேசி, கணினி விற்பனை குறித்த எதிர்கால நம்பிக்கையையும் மங்கச் செய்துள்ளது.

கடந்த சில மாதங்களாக, ‘மைக்ரான்’ போன்ற தரவுச் சேமிப்புச் சில்லுகளைத் தயாரிக்கும் தரவுச் சேமிப்புச் சில்லுகளைத் தரவுச் சேமிப்புச் சில்லுகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள், ‘என்விடியா’ போன்ற ஏஐ சில்லுத் தயாரிப்பாளர்களிடமிருந்து வரும் கொள்முதல்களுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றன. 

இது அவர்களுக்குச் சாதனை அளவிலான லாபத்தைப் பெற்றுத் தந்தாலும், மின்னணுச் சாதனத் தயாரிப்பாளர்களுக்கான விநியோகத்தைக் குறைத்துள்ளது. இதனால் அவர்கள் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆப்பிள் நிறுவனத்தின் அறிக்கை 

“கணினிப் பாகங்களின் விலை இவ்வளவு விரைவாகவும், இந்த அளவிலும் உயர்ந்ததை நாங்கள் இதுவரை கண்டதில்லை,” என்று ஆப்பிள் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“இதுவரை இந்த விலை உயர்விலிருந்து எங்கள் வாடிக்கையாளர்களைப் பாதுகாத்து வந்தோம். ஆனால், தற்போது ஐபேட், மேக்புக் சாதனங்களுக்கான விலை உயர்வு உட்பட, பல்வேறு தயாரிப்புகளின் விலைகளை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம்,” என்று அந்நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்