‘மேக் மினி’ கணினியை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்

‘மேக் மினி’ கணினியை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்

2 mins read
5f88c0f7-287a-4a54-8223-0b4d958423f3
செப்டம்பர் மாதத்தில் அடுத்த ஐபோன்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வுக்கு முன்னரே புதிய மேசைக்கணினிகள் சந்தைக்கு வரும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத வட்டாரங்கள் தெரிவித்தன.  - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

லாஸ் ஏஞ்சலிஸ்: ஆப்பிள் நிறுவனம் கிட்டத்தட்ட ஈராண்டுகளில் முதன்முறையாக தனது ‘மேக் மினி’ கணினியின் புதிய பதிப்பை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரும் நாள்களில் அந்தப் புதிய மேசைக்கணினி அறிமுகம் செய்யப்படலாம் என்று அவை கூறின. செப்டம்பர் மாதத்தில் அடுத்த ஐபோன்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வுக்கு முன்னரே புதிய மேசைக்கணினிகள் சந்தைக்கு வரும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆப்பிள் நிறுவனம் தனது எம்5, எம்6 என்ற இரு தலைமுறைச் செயலாக்கிகளில் அவற்றின் பதிப்புகளைச் சோதித்துள்ளது.

தற்போது மேக் மினி கணினிகளுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் அண்மை மேம்பாடு வந்துள்ளது. ஏனெனில், செயற்கை நுண்ணறிவுச் செயலிகளைக் கணினியிலேயே நேரடியாக இயக்குவதற்கு இது ஒரு பிரபலமான கருவியாக மாறியுள்ளது. அதே நேரத்தில், கணினிச்சில்லுத் தட்டுப்பாடு காரணமாக அவற்றைச் சேமித்து வைத்திருப்பது ஆப்பிள் நிறுவனத்திற்குச் சவாலாக மாறியுள்ளது.

கலிஃபோர்னியாவின் கூப்பர்ட்டினோவைத் தளமாகக் கொண்ட அந்நிறுவனத்தின் பேச்சாளர் இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இவ்வாண்டின் பிற்பாதியில் வரவிருக்கும் புதிய பொருள்களின் வரிசையில் புதிய ‘மேக் மினி’ கணினியும் ஒன்று.

அடுத்த மாதம் 9 ஆம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் அறிமுக நிகழ்ச்சி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது நிறுவனத்தின் மடிக்கக்கூடிய முதல் திறன்பேசியும் ‘ஐபோன் 18 புரோ’ கைப்பேசியும் அறிமுகப்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது.

மேலும், சிறிய மாற்றங்களுடன் கூடிய புதிய ஆப்பிள் கடிகாரங்களை வெளியிடவும் நிறுவனம் ஆயத்தமாகி வருகிறது.

குறிப்புச் சொற்கள்
ஆப்பிள்நிறுவனம்கணினிகணினிச் சில்லுகருவிஅமெரிக்கா