ஆப்பிள் நிறுவனத்தின் கணினி விற்பனை இவ்வாண்டின் முதல் காலாண்டில் 40.5 விழுக்காடு குறைந்துள்ளது.
இவ்வாண்டு பொதுவாகவே அனைத்து நிறுவனங்களின் கணினி விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. அதில் இப்போது ஆப்பிள் நிறுவனமும் இணைந்துள்ளது.
கிட்டத்தட்ட 57 மில்லியன் கணினிகள் விற்காமல் உள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.
முன்னணி நிறுவனங்களான லெனோவோ, டெல், எச்பி ஆகியவற்றின் கணினிகளும் ஏறத்தாழ 30 விழுக்காடு விற்பனையாகாமல் சுணக்கம் கண்டுள்ளன.
கொவிட்-19 காலகட்டத்தில் கணினிக்கான தேவைகள் அதிகம் இருந்ததால் நிறுவனங்கள் அதிகமான கணினிகளைத் தயாரித்தன.
ஆனால் இப்போது அத்தேவை குறைந்துள்ளதால் விற்பனையும் குறைந்துள்ளது.
பொருளியல் மந்தநிலையால் மக்கள் தங்களின் செலவுகளை குறைத்துள்ளனர். அதனால் கைப்பேசிகளின் விற்பனையும் கடுமையாகச் சரிந்துள்ளது.

