தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆப்பிள் கைக்கடிகாரம் கரிம வெளியேற்றத்தைக் குறைக்கவில்லை: ஜெர்மன் நீதிமன்றம்

1 mins read
1402f4b5-7873-4843-9f4c-61e74fb95f30
ஆப்பிள் கைக்கடிகாரங்கள் கரிம வெளியேற்றத்தை ஆதரிக்கவில்லை என்று ஜெர்மானிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

பெர்லின்: ஆப்பிள் நிறுவனம் அதன் கைக்கடிகாரங்கள் கரிம வெளியேற்றத்தைக் குறைக்க உதவும் பொருள் என்று ஜெர்மனியில் இனி விளம்பரப்படுத்த முடியாது என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் பயனீட்டாளர்களைத் திசைதிருப்பியுள்ளதாக சுற்றுப்புற ஆர்வலர்கள் முன்வைத்த புகாரின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

‘கரிம வெளியேற்றத்தைக் குறைக்க உதவும் எங்கள் முதல் தயாரிப்பு’ என்று ஆப்பிள் அதன் கைக்கடிகாரங்களை இணையத்தில் விளம்பரப்படுத்தியது.

ஆனால் அதற்குரிய அம்சம் அதில் எதுவும் இல்லை என்றும் ஜெர்மனியில் போட்டித்தன்மை சட்டத்தை அது மீறுகிறது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

கரிம வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான தங்கள் முயற்சியைத் தீர்ப்பு கீழறுப்பதாகக் கூறிய ஆப்பிள், மேல்முறையீடு செய்யப் போகிறதா என்பதைக் குறிப்பிடவில்லை.

எனினும் கரிம வெளியேற்றத்துக்கு உதவும் சின்னத்தை ஆப்பிள் கைக்கடிகாரங்களிலிருந்து நீக்கப்போவதாக நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் பேச்சாளர் சுட்டினார்.

ஜெர்மனியில் கரிம வெளியேற்றப் புள்ளிகளைப் பெறும் நோக்கில் ஆப்பிள் நிறுவனத்தைத் தவிர, மெட்டா, மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்களும் கரிமத்துக்கு உகந்த திட்டங்களில் முதலீடு செய்கின்றன.

குறிப்புச் சொற்கள்