அஃகபா விமான நிலையம், துறைமுகம் வழக்கம்போல் செயல்படுகிறது: ஜோர்தான்

அஃகபா விமான நிலையம், துறைமுகம் வழக்கம்போல் செயல்படுகிறது: ஜோர்தான்

1 mins read
d9808789-4415-4135-940a-b7c45b92df93
அமெரிக்கக் குடிமக்கள் அஃகபா விமான நிலையம், துறைமுகத்திற்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும் அமானில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. - படம்: நியூயார்க் டைம்ஸ்

அமான்: அஃகபாவில் உள்ள விமான நிலையம், துறைமுகத்தில் இருப்பவர்களை வெளியேற்றுமாறு சனிக்கிழமை (ஜூலை 19) ஜோர்தான் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ளார்.

அச்சுறுத்தல் காரணமாக விமான நிலையம், துறைமுகம் ஆகியவை காலி செய்யப்பட்டதாக அமானில் உள்ள அமெரிக்கத் தூதரகம் கூறியதை அடுத்து ஜோர்தான் பேச்சாளர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

“ஜோர்தான் அதிகாரிகளால் எந்தவொரு ஆபத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்படவில்லை. விமான நிலையமும் துறைமுகமும் வழக்கம்போல இயங்கி வருகின்றன,” என்றும் அவர் கூறினார்.

அமெரிக்கக் குடிமக்கள் அஃகபா விமான நிலையம், துறைமுகத்திற்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும் அமானில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

ஈரானியத் தாக்குதலுக்குப் பிறகு ஜோர்தானில் தங்களுடைய வீரர்கள் இருவர் கொல்லப்பட்டதாகவும் மற்றொருவரைக் காணவில்லை என்றும் அமெரிக்க ராணுவம் ஜூலை 18ஆம் தேதி தெரிவித்திருந்தது.

கடந்த வாரத்தில், தனது வான்வெளிக்கு மேல் பறந்த ஈரானிய ஏவுகணைகளைத் தான் பலமுறை சுட்டு வீழ்த்தியதாக ஜோர்தான் தொடர்ந்து கூறி வருகிறது.

குறிப்புச் சொற்கள்
ஜோர்தான்போர்ஈரான்அமெரிக்கா