ஸ்பெயினில் பனிமூட்டம்: வாகன ஓட்டுநர்களை மீட்க ராணுவத்திற்கு அழைப்பு

ஸ்பெயினில் பனிமூட்டம்: வாகன ஓட்டுநர்களை மீட்க ராணுவத்திற்கு அழைப்பு

1 mins read
41d6b703-321b-4c13-b28c-2257fb26ad17
கடும் பனிப்பொழிவில் சிக்கிய ஓட்டுநர்களை மீட்பதற்காக விரைந்து செல்லும் அவசர வாகனம். - படம்: ராய்ட்டர்ஸ்

மட்ரிட்: ஸ்பெயினின் பல பகுதிகளில் கடும் பனிமூட்டம் ஏற்பட்டுள்ள நிலையில், பனிநிறைந்த சாலை ஒன்றில் சிக்கிய ஏறக்குறைய 600 ஓட்டுநர்களை மீட்பதற்கு ராணுவத்தினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

கடும் பனிப்பொழிவு காரணமாக வடக்கு ஸ்பெயினில் ‘சொரியா’ பகுதிக்கும் ‘அக்ரேடா’ பகுதிக்கும் இடையிலான ‘என்-122’ சாலையில் ஓட்டுநர்கள் பல மணி நேரம் சிக்கினர்.

அதனால் அவர்களை அச்சாலையிலிருந்து வெளியேற்றுவதற்கு ‘ஸாராகோஸா’ தளத்தில் உள்ள ராணுவப் படைகளை அங்கு அனுப்பியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஸ்பெயினின் கிழக்கில் உள்ள ‘அராகோன்’ பகுதியில் பனிப்பொழிவினால் சில சாலைகளைக் கடக்கமுடியவில்லை என்றும் ‘ஸாரகோசா’ விமான நிலையம் மூடப்பட்டது என்றும் குடிமைப் பாதுகாப்புப் படையின் மிகுவெல் அங்கெல் கிலவெரொ கூறினார்.

‘சொரியா’வில் தட்பவெப்பநிலை பூஜ்ஜியத்திற்குக் கீழ் 13 டிகிரி செல்சியஸ் பதிவானதாக வானிலை ஆய்வகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

ஸ்பெயினின் வடகிழக்குப் பகுதிகளான ‘எக்ஸ்ட்ரிமடூரா’விலும், ‘கேட்டலோனியா’விலும் கனமழை பெய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்