தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மியன்மார் விவகாரம்: சிறப்பு நிரந்தரத் தூதரை நியமிக்க ஆசியான் இணக்கம்

2 mins read
46வது ஆசியான் உச்சநிலை மாநாட்டைத் தொடங்கிவைத்தார் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம்
475ce58a-3a34-491e-974a-be94c865eeee
கோலாலம்பூரில் 46வது ஆசியான் உச்சநிலை மாநாட்டைத் தொடங்கிவைத்து மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் உரையாற்றினார். - படம்: சாவ் பாவ்

மியன்மாரில் அமைதியை நிலைநிறுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளில் பெருமுன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவை பெரும்பாலும் அமைதியான கலந்துறவாடல்கள் மூலம் எட்டப்பட்டதாகவும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

அமைதி நிலையை எட்டுவதற்கு விரியும் நீரிணையைவிட உடையும் அபாயமுடைய பாலமே நல்லது என்று 46வது ஆசியான் உச்சநிலை மாநாட்டைத் தொடங்கிவைத்து பேசிய அன்வார் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு ஆசியான் தலைமைத்துவத்தை ஏற்றுள்ள மலேசியா, மியன்மார் விவகாரத்தில் முனைப்புடன் செயல்பட்டு வந்துள்ளது.

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத்தின் தலைமையில் ஆலோசனைக் குழுவை மலேசியா அமைத்தது. புருணையில் சுல்தான் ஹசனல் போல்கியா தலைமையில் அந்தக் குழு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.

தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் நடைபெற்ற மூன்றாவது சந்திப்பை அடுத்து மியன்மாரில் அமைதியை நிலைநாட்டும் முயற்சியில் முன்னேற்றம் காணப்பட்டதாக திரு அன்வார் கூறினார்.

மியன்மாருடனான அடுத்த கூட்டத்தை கம்போடியாவின் முன்னாள் பிரதமர் சம்டெக் ஹுன் சென் வழிநடத்துவார் என்றும் அவர் தெரிவித்தார்.

மியன்மார் ராணுவத் தலைவர் மின் அவ்ங் ஹிலைங்குடனும் எதிர்த்தரப்பு தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்துடனும் தனித்தனியே பேச்சுவார்த்தைகளை இந்த மாதத் தொடக்கத்தில் தொடங்கியுள்ளார் திரு அன்வார்.

ஆசியானின் சமரச முயற்சிகளில் முக்கியமானதாகச் சிறப்பு நிரந்தரத் தூதரையும் மூவாண்டுகளுக்கு நியமிக்க வெளியுறவு அமைச்சர்கள் இணங்கியுள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சர் முகம்மது ஹசான் கூறியுள்ளார்.

ஆசியான் உச்சநிலை மாநாடு மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் ‘கேஎல்சிசி’ மாநாட்டு மண்டபத்தில் திங்கட்கிழமை (மே 26) காலை தொடங்கியது.

சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா, புருணை, தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, வியட்னாம், பிலிப்பீன்ஸ், மியன்மார் ஆகிய உறுப்பு நாடுகளையும் விரைவில் 11வது உறுப்பு நாடாகச் சேரவிருக்கும் திமோர் லெஸ்தேயையும் பிரதிநிதித்து தலைவர்கள் கூடினர்.

தலைவர்கள் அனைவரையும் ஒவ்வொருவராக வரவேற்றபின் ஆசியானுக்கு உரிய தனித்துவ கைக்குலுக்கலுடனான புகைப்படத்தைத் தலைவர்கள் எடுத்துக்கொண்டனர்.

பின்னர் மாநாட்டு அறையில் உரையைத் தொடங்கிய திரு அன்வார், திறந்த, அனைவரையும் உள்ளடக்கிய, சட்ட அடிப்படையிலான அனைத்துலக முறையே ஆசியானின் அமைதி, நிலைத்தன்மை, வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்துள்ளது என்றார். தற்போது காரணமில்லாத செயல்பாடுகள் அந்த அடித்தளத்தை அசைக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், சவால்களையும் நிச்சயமற்ற சூழலையும் எதிர்கொள்ள வலுமிக்க ஆசியானால் முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆசியானின் எதிர்காலத்தை நாமே அமைக்கவேண்டும் என்ற கடப்பாடு நமது எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கு வித்திடும் என்றும் திரு அன்வார் கூறினார்.

குறிப்புச் சொற்கள்