வலுவிழந்த ஆசியச் சந்தைகள்

வலுவிழந்த ஆசியச் சந்தைகள்

1 mins read
f18815cd-c43a-4b98-b6ee-f315633915bc
அமெரிக்கப் பொருளியல் சீர்குலையாமல் இருப்பதற்கான தேவை இருப்பதை அமெரிக்க மத்திய வங்கி அறிந்திருப்பதாக அதன் தலைவர் ஜரோம் பொவேல் கூறினார். - படம்: ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூர்: அமெரிக்க மத்திய வங்கி அதன் வட்டி விகிதத்தில் இவ்வாண்டு தொடர்ந்து இரண்டாம் முறையாக மாற்றங்களைச் செய்யாதபோதும் மீண்டும் வட்டி விகிதத்தில் ஓர் ஏற்றமும் அடுத்த 12 மாதங்களில் வட்டி விகிதம் குறைக்கப்படுவதற்கான சாத்தியமும் உள்ளது.

வியாழக்கிழமை ஆசியாவில் பங்குகளின் விலை சரிந்தது. அமெரிக்கச் சந்தையிலும் பங்குகளின் விலை இறக்கம் கண்டது. இருப்பினும், வட்டி விகிதம் கூடுதல் காலத்திற்கு அதிகமாக இருக்கும் என்று மத்திய வங்கி கோடிகாட்டியதைத் தொடர்ந்து அமெரிக்க டாலர் வலுப்பெற்றது.

ஜப்பானின் நிக்கேய் குறியீடு 0.86 விழுக்காடு சரிந்தது. ஹாங்காங்கில் ஹங் செங் குறியீடு 0.76 விழுக்காடும் ஷாங்ஹாய் குறியீடு 0.17 விழுக்காடும் இறங்கின.

தென்கொரியப் பங்குகளின் விலை 1.2 விழுக்காடு விலை குறைந்தது. ஆஸ்திரேலியப் பங்குகளின் விலை 0.73 விழுக்காடு சரிந்தது.

சிங்கப்பூரில் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீடு வியாழக்கிழமை காலை 9.49 மணி நிலவரப்படி 0.82 விழுக்காடு இறங்கியது.

குறிப்புச் சொற்கள்