சவூதி அரேபியாவில் நடைபெறவிருக்கும் ஆசியக் கிண்ணம் போரால் ஒத்திவைக்கப்படலாம்

சவூதி அரேபியாவில் நடைபெறவிருக்கும் ஆசியக் கிண்ணம் போரால் ஒத்திவைக்கப்படலாம்

படம்: ராய்ட்டர்ஸ்

15 Oct 2026 - 7:21 pm

1 mins read

சூரிக்: சவூதி அரேபியாவில் ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் ஆசியக் கிண்ணக் காற்பந்தாட்டப் போட்டி, தேவை ஏற்பட்டால் 2028ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படும் என்று அதன் உயர் காற்பந்தாட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஹூதி கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதல்களை முன்னிட்டு அவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

ஆனால், ஆசியாவின் பிரிமியர் காற்பந்தாட்டப் போட்டிகள் குறித்த முடிவை எடுக்க அவசரப்படவில்லை என்று ஆசியக் காற்பந்துக் கூட்டமைப்பு தலைவர் ‌ஷெக் சல்மான் பின் இப்ராகிம் தெரிவித்தார்.

ஜனவரி 7ஆம் தேதி, 2027ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணம் ஜெட்டா, ரியாத், அல் கோபார் ஆகிய நகரங்களில் தொடங்கவிருந்தது.

ஆசியக் கிண்ணம் குறித்த முடிவை எடுக்க நவம்பர் இறுதிவரை காத்திருக்க முடியும் என்றார் ஏஎஃப்சி தலைவர்.

“வட்டார சூழ்நிலைகள் நன்மையாகவும் தீமையாகவும் மாறலாம். எனவே என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்,” என்றார் அவர்.

“நாம் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றால் நிச்சயம் எடுப்போம், ஆனால் தேவைப்பட்டால் அதை ஓர் ஆண்டு தள்ளிப்போட்டு 2028ஆம் ஆண்டுக்குக் கொண்டு செல்லலாம். தற்போது நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். அனைத்தும் திட்டமிட்டபடி சரியாக நடந்து கொண்டிருக்கிறது,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
ஆசியக் கிண்ணம்காற்பந்துஒத்திவைப்புசவூதி அரேபியாபோர்